திருப்பத்தூர்

வாணியம்பாடி அருகே மின்சாரம் பாய்ந்து முன்னாள் மாவட்ட ஆட்சியர் பலி

3rd Oct 2021 08:23 PM

ADVERTISEMENT

வாணியம்பாடி அருகே விவசாய நிலத்தில் மின்சாரம் பாய்ந்து நாமக்கல் மாவட்ட முன்னாள் ஆட்சியர் பலியானார்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வடக்குப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (69). இவர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் வணிக வரித்துறை  இயக்குனர், சென்னை கார்ப்பரேஷன் சிறுசேமிப்பு தலைவர் உட்பட பல்வேறு துறைகளில் பொறுப்புகள் வகித்து வந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கொய்யா தோட்டத்திற்கு ஞாயிற்றுக்கிழமை காலை சென்று பணி மேற்கொண்டுள்ளார். 
அப்போது அங்குள்ள மின்கம்பி அறுந்து செடி மீது விழுந்துள்ளது. இதையறியாமல் வேலை செய்துக் கொண்டிருந்த போது மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தார். இதுபற்றி அறிந்த அப்பகுதி மக்கள் உடனே மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பிறகு மயங்கி விழுந்திருந்த அவரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

இதையும் படிக்க- தமிழகத்தில் இன்று மேலும் 1,531 பேருக்கு கரோனா

அங்கு அவரை பரிசோதித்த போது ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர் கூறினர். இதையடுத்து அவரது உடல் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இறந்த சுந்தரமூர்த்தி மகன் ஆஸ்திரேலியாவில் வெளியுறவு தூதரகத்தில் பணியாற்றி வருவதால் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக அம்பலூர் போலீஸார் வழக்கு பதிவந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Vaniyambadi
ADVERTISEMENT
ADVERTISEMENT