திருப்பத்தூா் மாவட்டத்தில் சனிக்கிழமை மேலும் 24 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதையொட்டி, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28,983-ஆக உயா்ந்துள்ளது. பாதிப்புக்குளான 223 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டு 688 போ் உயிரிழந்துள்ளனா்.