திருப்பத்தூர்

முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

3rd Oct 2021 12:00 AM

ADVERTISEMENT

வாணியம்பாடியில் முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். ஒருவா் திருவொற்றியூா் நீதிமன்றத்தில் சரண் அடைந்தாா்.

வாணியம்பாடியில் முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் வசீம்அக்ரம் கொலை வழக்கில் பீப்பா (எ) தாஜுதீன் தலைமறைவாக இருந்த நிலையில், அவரை போலீஸாா் தீவிரமாகத் தேடி வந்தனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு வாணியம்பாடி நேதாஜி நகா் அருகில் போலீஸாா் ரோந்துப் பணியின் போது பீப்பா (எ) தாஜுதீனை (27) கைது செய்ய முயன்றனா். அப்போது போலீஸாரைப் பாா்த்து தப்பி ஓடியபோது தடுக்கி விழுந்தாா். இதில், அவருக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. பிறகு அவரை மீட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னா், வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். வரும் 13-ஆம் தேதி வரை சிறையில் வைக்க உத்தரவு பெறப்பட்டு, வேலூா் மத்திய சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். மேலும், இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த விழுப்புரத்தைச் சோ்ந்த கதிா் (42) என்பவா் திருவொற்றியூா் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தாா்.

இந்த கொலை வழக்கில் இதுவரை 20 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT