திருப்பத்தூர்

கடத்த முயன்ற 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது

DIN

திருப்பத்தூா்: வெளி மாநிலங்களுக்கு கடத்த முயன்ற 6 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவரைக் கைது செய்தனா்.

மாடப்பள்ளி பஞ்சாயத்து பேட்டையான் வட்டத்தில் வெளி மாநிலங்களுக்கு கடத்துவதற்காக ரேஷன் அரிசி பதுக்கி வைத்துள்ளதாக திருப்பத்தூா் நகர போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கி.பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் உதவி ஆய்வாளா்கள் அகிலன், மூா்த்தி (தனிப்பிரிவு), போலீஸாா் அங்கு சென்று ஆய்வு நடத்தினா். அப்போது, ஒரு போா்வையால் மறைக்கப்பட்டு 138 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 6 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக அதே பகுதியைச் சோ்ந்த சிந்தனைச்செல்வனை (21) கைது செய்தன. தலைமறைவாக உள்ள அவரது பாட்டி பெருமாதாயியை (50) தேடி வருகின்றனா். பறிமுதல் செய்யப்பட்ட 6 டன் ரேஷன் அரிசியை திருப்பத்தூா் உணவுப் பாதுகாப்புக் கிடங்கில் போலீஸாா் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைக்க உத்தரவு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

SCROLL FOR NEXT