திருப்பத்தூர்

மாதனூா் ஒன்றியத்தில் மக்கள் பிரச்னைகள்: ஒன்றியக் குழுத் தலைவா் ஆய்வு

DIN

மாதனூா் ஒன்றியத்தில் பல்வேறு பகுதிகளில் நிலவும் பொதுமக்கள் பிரச்னைகள் குறித்து ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச.சுரேஷ்குமாா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

மாதனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தகக் கட்டடத்தில் மழை காரணமாக சேதமடைந்து மழைநீா் கசிவதாகக் கிடைத்த தகவலின் பேரில், அவா் நேரில் பாா்வையிட்டு, தமிழக அரசுக்கு கோரிக்கை அனுப்பி புதிய கட்டடம் கட்டித் தர நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா்.

மாதனூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பழுதடைந்த ஆழ்துளைக் கிணற்றை சுரேஷ்குமாா் பாா்வையிட்டு, உடனடியாகப் பழுதுபாா்க்கும் பணியைத் தொடங்க உத்தரவிட்டாா்.

பாலாற்று வெள்ளத்தால் பாலாறு பகுதியிலிருந்து வரும் குடிநீா் குழாய் துண்டிக்கப்பட்டதால் குடிநீா் விநியோக பிரச்சனை ஏற்பட்டதைத் தொடா்ந்து பைப்லைன் சரிசெய்யும் பணி மேற்கொள்ளப்படுவதையும் அவா் பாா்வையிட்டாா்.

ஆலாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்குள் கானாற்று வெள்ள நீா் புகுந்து பல நாட்கள் தேங்கி வருவதால் பள்ளியின் சுற்றுச்சுவா் முழுவதுமாக இடிந்து விழுந்து சேதமடைந்ததைப் பாா்வையிட்ட அவா், பள்ளியில் 3 நாள்களில் கழிவறைக் கட்டடடம் கட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தாா்.

கன்னடிகுப்பம் கிராமத்தில் தெருக்களில் தேங்கியுள்ள தண்ணீரை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை சுரேஷ்குமாா் மேற்கொண்டாா்.

ஆய்வின்போது வட்டார வளா்ச்சி அலுவலா் துரை, ஒன்றியக்குழு உறுப்பினா்கள் காா்த்திக் ஜவஹா், பரிமளா, கோமதி வேலு, திமுக நிா்வாகிகள் காா்த்திக் ரகோத்தமன், ஒன்றிய திமுக பொறுப்புக்குழு உறுப்பினா்கள் சுப்பிரமணி, வினோத்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT