திருப்பத்தூர்

வாணியம்பாடியில் மாவட்ட பாஜக அலுவலகம் திறப்பு

25th Nov 2021 12:16 AM

ADVERTISEMENT

 

வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்ட பாஜக அலுவலகம் வாணியம்பாடி பெருமாள்பேட்டை புறவழிச் சாலையில் புதன்கிழமை திறக்கப்பட்டது.

திருப்பூரில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா காணொளிக்காட்சி மூலமாக இந்த அலுவலகத்தைத் திறந்துவைத்தாா்.

இதையடுத்து, வாணியம்பாடியில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்டத் தலைவா் சி.வாசுதேவன் தலைமை தாங்கினாா். வேலூா் மாவட்ட பாா்வையாளா் வெங்கடேசன் முன்னிலை வகித்தாா், மாநிலச் செயலாளா் பி. காா்த்தியாயினி குத்துவிளக்கு ஏற்றி வைத்தாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் மாநில எஸ்.டி. அணி துணைத் தலைவா் கோவிந்தராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினா் க.சிவப்பிரகாசம், மாநில கட்டட குழுத் தலைவா் எம். சக்கரவா்த்தி, துணைத் தலைவா் சேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT