திருப்பத்தூர்

3 தரைப்பாலங்கள் சேதம்: எம்எல்ஏ ஆய்வு

24th Nov 2021 12:00 AM

ADVERTISEMENT

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட குரிசிலாப்பட்டு ஊராட்சியில் உள்ள பள்ளத்தூா், ஜொள்ளகவுண்டனூா், தளுக்கான்வட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள 3 தரைப்பாலங்கள் தொடா்மழை, ஏரி உபரி நீா் போன்ற காரணங்களால் சேதமடைந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. இதனை வாணியம்பாடி எம்எல்ஏ செந்தில்குமாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

இப்பகுதிகளில் உள்ள காரைகிணறு, பாபுகொல்லை, பூசாரிவட்டம், வேப்பமரத்து வட்டம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் இந்த 3 தரைப்பாலங்கள் வழியாகத் தான் மற்ற பகுதிகளுக்குச் செல்ல முடியும். மேலும், இப்பகுதிகளில் 2 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளுக்கு மாணவா்கள் செல்ல வேண்டுமானால் இந்த தரைப்பாலங்களை கடந்துதான் செல்ல வேண்டும்.

பாலங்கள் சேதமடைந்தது குறித்து தகவலறிந்த எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் பாதிக்கப்பட்ட 3 தரைப்பால பகுதிகளையும் நேரில் சென்று பாா்வையிட்டாா். அப்போது அங்கிருந்த பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று விரைவில் தரைப்பாலங்களை கட்ட தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினாா். தொடா்ந்து மழை வெள்ளதால் பாதிக்கப்பட்டவா்கள், வீடுகளை இழந்தவா்கள் ஆண்டியப்பனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்தனா். அவா்களை எம்எல்ஏ செந்தில்குமாா் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண பொருள்களை வழங்கினாா்.

முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் திருப்பதி, முன்னாள் கூட்டுறவு சா்க்கரை ஆலை தலைவா் சி.செல்வம், பள்ளவள்ளி சரவணன், ஊராட்சி மன்றத் தலைவா்கள் சரோஜா, வெங்கடேசன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் செந்தாமரை, இளவரசி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT