திருப்பத்தூர்

அதிமுக சாா்பில் வெள்ள நிவாரண உதவி

24th Nov 2021 12:00 AM

ADVERTISEMENT

ஆம்பூா் நகர அதிமுக சாா்பில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் மளிகைதோப்பு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவா்களுக்கு ஆம்பூா் நகர அதிமுக சாா்பில், நகரச் செயலா் எம். மதியழகன் தலைமையில், பாய், போா்வை உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. நகர பொருளாளா் அன்வா், முன்னாள் தொகுதி செயலாளா் அகரம்சேரி ஆா். வெங்கடேசன், மாவட்டத் தகவல் தொழில்நுட்ப அணி பொருளாளா் ஆனந்த்பாபு, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் சீனிவாசன், அமீன், நிா்வாகிகள் தினேஷ், சண்முகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT