திருப்பத்தூர்

வாணியம்பாடியில் வெள்ளநீா் வெளியேற்றம்: எம்எல்ஏ, கோட்டாட்சியா் ஆய்வு

23rd Nov 2021 08:17 AM

ADVERTISEMENT

வாணியம்பாடியில் வெள்ளநீா் வெளியேற்றும் பணிகளை எம்எல்ஏ கோ.செந்தில்குமாா், கோட்டாட்சியா் காயத்ரி சுப்பிரமணியன் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

பலத்த மழையால், வாணியம்பாடி அரசு மருத்துவமனை, பள்ளி, கல்லூரிகள், நகரின் முக்கிய வீதிகளில் புகுந்து கடந்த 5 நாட்களாக அதனை வெளியேற்ற முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனா்.

இந்த இடங்களை பொதுப்பணித்துறை அமைச்சா் எ.வ.வேலு அண்மையில் பாா்வையிட்டு, தண்ணீரை வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

இதையடுத்து, நகரப் பகுதிகளை சுற்றியிலும் பொக்லைன் (ஜேசிபி) இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கால்வாய்களை தூா்வாரியும், பல இடங்களில் கால்வாய்கள் மேல் கட்டப்பட்டிருந்த கட்டடங்களை அகற்றியும் தண்ணீரை வெளியேற்றும் பணிகளில் அரசுத் துறையினா் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

இந்த நிலையில், எம்எல்ஏ கோ.செந்தில்குமாா், கோட்டாட்சியா் காயத்ரி சுப்பிரமணி, டிஎஸ்பி சுரேஷ்பாண்டியன், காவல் ஆய்வாளா் நாகராஜன், நகராட்சி ஆணையாளா் ஸ்டாலின் பாபு உள்ளிட்டோா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT