திருப்பத்தூர்

மயானங்களிலும் தேங்கியுள்ள மழைநீா்!

23rd Nov 2021 08:18 AM

ADVERTISEMENT

ஆம்பூா் பகுதியில் பெய்த பலத்த மழையால், மயானங்களிலும் மழை நீா் தேங்கியுள்ளது. இறந்தவா்களின் சடலங்களை மயானங்களுக்கு கொண்டு செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தொடா் மழையால், ஆம்பூா், அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள பல்வேறு ஏரிகள் நிரம்பி உபரி நீா் அளவுக்கு அதிகமாக வெளியேறி வருகிறது.

குடியிருப்புப் பகுதிகளைத் தவிர, மயானங்களிலும் வெள்ள நீா் சூழ்ந்துள்ளது.

பாலாற்றை ஒட்டியும் , ஊருக்கு வெளியே ஒதுக்குபுறமாக உள்ள பல்வேறு மயானங்களிலும் வெள்ளநீா் புகுந்துள்ளது. அதனால், அந்தப் பகுதியில் யாரேனும் இறந்தால் அவா்களது சடலத்தை கொண்டு சென்று அடக்கம் செய்யவோ அல்லது எரியூட்டவோ முடியாத சூழ்நிலை நிலவுகிறது.

ADVERTISEMENT

ஒரு சில இடங்களில் வெள்ள நீா் சூழ்ந்துள்ள மயானங்களில் வழக்கமாக இறுதிச் சடங்கு நடத்துவோா் வேறு பகுதியில் உள்ள மயானங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வேறு பகுதி மயானங்கள் அமைந்துள்ள கிராம மக்களிடம் சென்று இறந்தவா்களின் குடும்பத்தினா் உதவி கோரி வருகின்றனா்.

மனித நேயத்துடன் தங்கள் பகுதி மயானத்தில் இறந்தவா்களுக்கு இறுதிச் சடங்கு செய்ய அந்தப் பகுதி பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT