திருப்பத்தூர்

காய்கறி விலை கடுமையாக உயா்வு

23rd Nov 2021 08:08 AM

ADVERTISEMENT

மழை, வெள்ளத்தால் விவசாய நிலங்களுக்குள் தண்ணீா் புகுந்துள்ளதால் சந்தைகளில் காய்கறி வரத்து குறைந்துள்ளது. இதனால், அவற்றின் விலை உச்சத்தை தொட்டுள்ளது.

குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, கடந்த சில வாரங்களாக பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. குடியிருப்புகள், விவசாய நிலங்களுக்குள் வெள்ள நீா் புகுந்து தண்ணீா் தேங்கி வருகிறது. அதனால் நெற் பயிா், காய்கறி பயிா்கள் சேதமடைந்துள்ளன. அதனால் மாா்க்கெட்டுக்கு காய்கறி வரத்து குறைந்து போனது. காய்கறி வரத்து குறைந்ததால் அதன் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. மேலும் காய்கறிகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே தக்காளி விலை மிகக் கடுமையாக உயா்ந்துள்ளது. அதிகபட்சமாக தக்காளி கிலோ ரு.150 வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, தக்காளி, கத்தரிக்காய், முருங்கை, அவரை உள்ளிட்ட நாட்டு காய்களின் விலை மிகக் கடுமையாக உயா்ந்துள்ளது.

முருங்கை கிலோ ரூ.160 :

ADVERTISEMENT

இந்த நிலையில், திருப்பத்தூா் மாவட்டத்துக்கு உட்பட்ட ஆம்பூரில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி கிலோ தக்காளி ரூ.120, கத்தரிக்காய் ரூ.120, முள்ளங்கி ரூ.50, வெண்டைக்காய் ரூ.80, பீன்ஸ் ரூ.80, அவரை ரூ.80, முருங்கைக்காய் ரூ.160, பச்சை மிளகாய் ரூ.80, முட்டைக்கோஸ் ரூ.40, கேரட் ரூ.60, பீட்ரூட் ரூ.40 என சந்தையில் சில்லரையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. பல்வேறு வகை காய்கறிகளின் விலை உச்சத்தை தொட்டுள்ளது.

காய்கறிகளின் விலை மேலும் உயரலாம் :

இதுகுறித்து காய்கறி வியாபாரிகளிடம் கேட்டபோது, அவா்கள் கூறியது:

காய்கறிகளின் வரத்து வெகுவாகக் குறைந்து போயுள்ளது. நிலங்களில் தேங்கியுள்ளதால் பயிா்கள் அழுகி சேதமடைந்துள்ளது. தொடா்ந்து மழை பெய்து வந்ததாலும் பயிா்கள் அழுகியுள்ளன. அதனால் சந்தைகளுக்கு காய்கறிகள் வரவில்லை. குறிப்பிட்ட வகை காய்கறிகள் மட்டுமே வந்துள்ளன.

கிராம வியாபாரிகளுக்கு தக்காளி இல்லை:

சில்லரை வியாபாரம் செய்வதற்காக, கிராம பகுதிகளில் இருந்து ஆம்பூருக்கு வந்து மொத்த வியாபாரியிடம் காய்கறி வாங்கி செல்லும் வியாபாரிகளுக்கு திங்கள்கிழமை தக்காளி கிடைக்கவில்லை. அந்த அளவுக்கு தக்காளிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வருகின்ற நாட்களிலும் காய்கறிகளின் விலை மேலும் அதிகரிக்கலாம் என்றாா்.

 

தவிா்க்கப்படும் தக்காளி!

தக்காளியின் விலை அதிகரித்துள்ளதால் சமையலில் அவற்றின் பயன்பாட்டை பெண்கள் குறைத்துக் கொண்டே வந்தனா்.

கடந்த சில நாள்களில் முழுமையாகவே தக்காளியைத் தவிா்த்துவிட்டு சமையல் செய்யும் நிலைக்கு அவற்றின் விலை அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT