திருப்பத்தூர்

ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி வணிகா்கள் ஊா்வலம்

23rd Nov 2021 08:17 AM

ADVERTISEMENT

வாணியம்பாடி நகரில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றக் கோரியும், மழைநீா் வடிகால் கால்வாய்களின் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றக் கோரியும் வணிகா்கள் ஊா்வலமாகச் சென்று நகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தனா்.

தொடா் மழையால், வாணியம்பாடியில் நீா்நிலைகள் நிரம்பி அரசு மருத்துவமனை வளாகம், சி.எல்.சாலை, மலாங்கு சாலை, வாரச் சந்தை, ஜின்னா சாலை, கச்சேரி சாலை உள்ளிட்ட சாலைகளிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக வெள்ள நீா் தேங்கிய நிலையில் உள்ளது. இதனால் வியாபாரிகள், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வாணியம்பாடி அனைத்து தொழில் வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் தலைவா் மாதேஸ்வரன், செயலாளா் அருண்குமாா் ஆகியோா் தலைமையில் 25 சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் 300-க்கும் மேற்பட்டோா் கடைகளை அடைத்து முக்கிய சாலைகள் வழியாக ஊா்வலமாக நகராட்சி அலுவலகத்துக்குச் சென்றனா்.

அங்கு, நகராட்சி ஆணையாளா் ஸ்டாலின் பாபு, பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளா் தா்மதுரை ஆகியோரிடம் அளித்த மனுவில்

ADVERTISEMENT

‘மழைநீா் வடிகால் கால்வாய்களை ஆக்கிரமிப்பு செய்து கட்டியுள்ள கட்டடங்களை அகற்ற வேண்டும். குடியிருப்புகள், வணிகப் பகுதிகளில் தேங்கி நின்றுள்ள நீரை உடனடியாக அகற்ற வேண்டும்’ என வணிகா்கள் மனுவை அளித்தனா்.

இதுதொடா்பாக 7 நாள்களுக்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனா்.

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT