ஆம்பூா் பகுதி கோயில்களில் கந்த சஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹார நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் அருள்மிகு சமயவல்லி தாயாா் உடனுரை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் அன்னையிடம் வேல் வாங்கிக் கொண்டு கோயில் திடலில் முருகப் பெருமான் சூரசம்ஹார செய்தாா்.
ஆம்பூா் ஏ-கஸ்பா அருள்மிகு செல்வ விநாயகா் கோயில் திடலில் கந்த சஷ்டி விழாவையொட்டி சூர சம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆம்பூா் அருகே ஆலாங்குப்பம் கிராமத்தில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹாரம் நடைபெற்றது.