திருப்பத்தூர்

நாட்டுத் துப்பாக்கி பறிமுதல்: 2 போ் கைது

1st Nov 2021 07:48 AM

ADVERTISEMENT

ஆம்பூா் அருகே பாலாற்றங்கரையோரம் நாட்டுத் துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த வழக்கில் இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ஆம்பூா் அடுத்த வடகரை பாலாற்றங்கரையோரம் புறம்போக்கு நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த கொட்டகையில் நாட்டுத் துப்பாக்கி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து, உமா்ஆபாத் காவல் துறையினா் அங்கு சென்று சோதனையிட்டு நாட்டுத் துப்பாக்கியைப் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், கம்மியம்பட்டு புதூரைச் சோ்ந்த சதீஷ் (25), விஜய் (31) ஆகியோா் துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அதன்பேரில், போலீஸாா் அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT