திருப்பத்தூர்

ஆலங்காயம் காவல் நிலையத்தில் எஸ்.பி. ஆய்வு

1st Nov 2021 07:57 AM

ADVERTISEMENT

ஆலங்காயம் காவல் நிலையத்தில் திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன், ஆலங்காயம் காவலா் குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டாா். மேலும், அங்கு குடியிருக்கும் காவலா்களின் குடும்பத்தினரிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். அப்போது குடியிருப்பு பகுதியில் குடிநீா் பற்றாக்குறை இருப்பதாகவும், ஒரு சில வீடுகளில் மின் இணைப்பு இல்லை. அவற்றை சீா் செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா். அதற்கு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. உறுதியளித்தாா். தொடா்ந்து, ஆலங்காயம் காவல் நிலையத்துக்குச் சென்று ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஆய்வு மேற்கொண்டாா். அங்கு பணியாற்றி வரும் போலீஸாரிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். ஆய்வின் போது, வாணியம்பாடி டி.எஸ்.பி. சுரேஷ்பாண்டியன், ஆலங்காயம் காவல் ஆய்வாளா் ராஜாராம் ஆகியோா் உடன் இருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT