திருப்பத்தூர்

கரோனா பாதிப்புக் குறைய சித்த வைத்தியமும் சிறந்த பலனைத் தருகிறது: அமைச்சர் துரைமுருகன்

27th May 2021 07:01 PM

ADVERTISEMENT

கரோனாத் தொற்று பாதிப்புக்குறைய சித்த வைத்தியமும் சிறந்த பலனைத் தருகிறது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். 

கரோனாத் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமை வகித்தார். கைத்தறி, துணிநூல் அமைச்சர் ஆர்.காந்தி முன்னிலை வகித்தார். ஆட்சியர் ம.ப.சிவன்அருள் மாவட்டத்தில் நடைபெற்று வரும் கரோனா தடுப்பு பணிகள் குறித்து பேசினார்.

அமைச்சர் துரைமுருகன் பேசியது, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ரஷியா போன்ற நாடுகள் கரோனாத் தொற்றுக்கான தடுப்பூசியை மட்டும்தான் கண்டுபிடுத்துள்ளனர். ஆனால், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் சித்த வைத்தியம் மூலம் கரோனாத் தொற்றை குணமாக்க முடியும் என நீருபிக்கப்பட்டுள்ளது. தினமும் 2 முறை ஆவி பிடியுங்கள், முகக்கவசம் அணியுங்கள், சமூக இடைவெளி கடைபிடியுங்கள் இதைத் தானே அரசு தெரிவிக்கிறது. 

முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நாள் முதல் காலை முதல் இரவு வரை கரோனாத் தொற்று குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டங்கள், கோப்புகளை கவனித்தல், மருத்துவ பணிகள் கண்காணித்தல் என பம்பரமாய் சுழன்று பணிபுரிகிறார். தமிழகத்திலேயே திருப்பத்தூர் மாவட்டத்தில்தான் 4 சித்த மருத்துவ கரோனா சிகிச்சை மையங்கள் உள்ளன. 

ADVERTISEMENT

குறிப்பாக திருப்பத்தூரில் முதன் முதலாக கரோனா தடுப்பு சித்த ஆலோசனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. படித்தவர்களே தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் மிகவும் தயங்குகின்றனர் என்றால் கிராம மக்களுக்கு எப்படி விழிப்புணர்வு ஏற்படுத்துவது. எனவே, தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில் மக்களவை உறுப்பினர்கள் டி.எம்.கதிர்ஆனந்(வேலூர்), சி.என்.அண்ணாதுரை(திருவண்ணாமலை), எம்எல்ஏக்கள் அ.நல்லதம்பி(திருப்பத்தூர்), க.தேவராஜி(ஜோலார்பேட்டை), அ.செ.வில்வநாதன்(ஆம்பூர்), எஸ்பி பொ.விஜயக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் என்.சி.இ.தங்கையா பாண்டியன், சார்-ஆட்சியர் வந்தனா கர்க், நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குநர் செ.விஜயக்குமார் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர். 

Tags : Minister Duraimurugan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT