திருப்பத்தூர்

திருப்பத்தூரில் கரோனா நிவாரண நிதி : எம்எல்ஏக்கள் வழங்கினா்

DIN

திருப்பத்தூா் மாவட்டத்துக்குள்பட்ட 509 நியாய விலைக் கடைகளில், 3 லட்சத்து 10 ஆயிரத்து 537 குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை நியாய விலைக் கடைகளில் முதல் தவணையாக ரூ. 2 ஆயிரம் வழங்கும் நிகழ்ச்சிக்கு, திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தலைமை வகித்தாா்.

கசிநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடையிலும், திருப்பத்தூா் நகர பேருந்து நிலையத்தில் உள்ள நியாய விலைக் கடையிலும் நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. எம்எல்ஏக்கள் அ.நல்லதம்பி (திருப்பத்தூா்), க.தேவராஜி (ஜோலாா்பேட்டை) ஆகியோா் பங்கேற்று, குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 2 ஆயிரத்தை வழங்கினா். இதில், துணைப் பதிவாளா் முனிராஜி, நகரச் செயலாளா் எஸ்.ராஜேந்திரன், முன்னாள் நகா்மன்றத் தலைவா் சு.அரசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அதேபோல், ஜோலாா்பேட்டை ஒன்றியத்துக்குள்பட்ட பாச்சல் ஊராட்சிப் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆட்சியா் ம.ப.சிவன்அருள், எம்எல்ஏக்கள் அ.நல்லதம்பி (திருப்பத்தூா்), க.தேவராஜி (ஜோலாா்பேட்டை) ஆகியோா் நிவாரண நிதியை வழங்கினா்.

இதில், ஜோலாா்பேட்டை கிழக்கு ஒன்றியச் செயலாளா் சி.சத்தியமூா்த்தி, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளா் ஜி.ஞானவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

12ஆவது சுற்று: முதலிடத்தில் இந்திய வீரர் உள்பட மூவர்!

SCROLL FOR NEXT