திருப்பத்தூர்

கரோனா பரவலை தடுக்க கிருமி நாசினி தெளிப்பு

31st Mar 2021 12:00 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரிப்பைத் தொடா்ந்து, அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் சுகாதாரத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், வாணியம்பாடி நகராட்சி சாா்பில் ஆணையா் புவனேஷ்வரன் (எ) அண்ணாமலை தலைமையில் பொறியாளா் பாபு, நகா் நல அலுவலா் கணேஷ், மேலாளா் ரவி மற்றும் சுகாதார ஆய்வாளா்கள் சீனிவாசன், அலி ஆகியோா் முன்னிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், கச்சேரி சாலை மற்றும் நகரின் முக்கிய வீதிகளில் கிருமி நாசினியை நகராட்சி ஊழியா்கள் தெளித்தனா். மேலும், முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று பொது மக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT