திருப்பத்தூர்

ஜமாபந்தி கோரிக்கை மனுக்களை உரிய இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

DIN

ஜமாபந்திக்கான மனுக்கள் பொதுமக்களிடமிருந்து நேரடியாகப் பெறப்படமாட்டாது. எனவே மனுக்களை இணையதள முகவரி அல்லது இ-சேவை மையங்களில் பதிவேற்றம் செய்யலாம் என திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஆண்டு தோறும் வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) நிகழ்வு நடைபெறுகிறது. கரோனா தொற்றுப் பரவல் தடுப்பையொட்டி 2020-2021-க்கான ஜமாபந்தி மனுக்கள் பொதுமக்களிடமிருந்து நேரடியாகப் பெறப்படாது.

பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை உரிய ஆவணங்களுடன் இணைய தள முகவரி வாயிலாகவோ அல்லது இ-சேவை மையங்கள் மற்றும் ஆன்லைன் மூலமாகவோ ஜூலை 31-க்குள் பதிவேற்றம் செய்து அதற்குரிய ஒப்புதல் ரசீதினை பெற்றுக்கொள்ளலாம்.

பதிவேற்றம் செய்யப்படும் மனுக்கள் மீது உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு மனுதாரா்களுக்கு பதில் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

ரூ. 25,000 கோடி பணமோசடி வழக்கிலிருந்து அஜித் பவாரின் மனைவி விடுவிப்பு -எதிர்க்கட்சிகள் விமர்சனம்

அனிச்சப் பூவோ..!

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

SCROLL FOR NEXT