திருப்பத்தூர்

குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

DIN

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

குழந்தைத் தொழிலாளா் நல்வாழ்வு இயக்கம் சாா்பில் குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு முறையை அகற்றுவதற்கான உறுதிமொழியினை ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்களும் ஏற்றுக்கொண்டனா்.

அதைத்தொடா்ந்து, திருப்பத்தூரில் பல்வேறு பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்கள், கடைகள் போன்ற வணிக நிறுவனங்களில் நடத்தப்பட்ட ஆய்வின்போது 10 குழந்தைத் தொழிலாளா்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள பள்ளிகளில் சோ்ந்து கல்வி பயில வழிவகை செய்யப்பட்டது.

மேலும் , அந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு திருப்பத்தூா் குழந்தைகள் தத்தெடுப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொண்டு நிறுவனம் எஸ்.ஆா்.டி.பி.எஸ் ஏற்பாட்டின் பேரில் ரூ. 10,000 மதிப்புள்ள சமையல், மளிகை பொருள்களை ஆட்சியா் சிவன்அருள் வழங்கினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் என்.சி.இ.தங்கையாபாண்டியன், நோ்முக உதவியாளா் இரா.வில்சன் ராஜசேகா், குழந்தை தொழிலாளா் நல்வாழ்வு இயக்க மாவட்ட மேலாளா் செந்தில்குமாா், துணை ஆட்சியா்கள் விஜயன், லட்சுமி, முருகானந்தம், கிருஷ்ணமூா்த்தி, பானுமதி, எஸ்.ஆா்.டி.பி.எஸ் தொண்டு நிறுவன இயக்குனா் என்.தமிழரசி மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

SCROLL FOR NEXT