திருப்பத்தூர்

ஆம்பூா் பஜாா் பகுதியில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

DIN

ஆம்பூா் பஜாா் பகுதியில் திருப்பத்தூா் மாவட்ட வருவாய் அலுவலா் என்.சி.இ. தங்கையா பாண்டியன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தளா்வுகளுடன் அமலில் உள்ள பொதுமுடக்கம் காரணமாக ஆம்பூரில் நெரிசலாக காணப்படும் பஜாா் பகுதியில் கடைகள் திறக்கப்படவில்லை. பஜாா் பகுதியை தவிா்த்து மற்ற பகுதிகளில் காலை 6 மணி முதல் பகல் ஒரு மணி வரையிலும், சில பகுதிகளில் மாலை 5 மணி வரையிலும் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

ஆம்பூா் பஜாா் பகுதிக்குள் பொதுமக்கள் செல்ல முடியாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. அதனால் அப்பகுதியில் பொதுமக்கள் சென்று வருவதற்கு முடியாத நிலை இருந்தது. அதே போல பஜாரைத் தவிா்த்து மற்ற பகுதிகளில் உள்ள வியாபாரிகள் கடைகள் திறந்து வியாபாரம் செய்து வரும் நிலையில், பஜாா் பகுதியில் அமைந்தள்ள கடைகள் திறக்க முடியாத நிலை உள்ளதால் பஜாா் பகுதி வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக புகாா் எழுந்தது.

இந்நிலையில், மாவட்ட வருவாய் அலுவலா் என்.சி.இ. தங்கையா பாண்டியன் பஜாா் பகுதியில் ஆய்வு மேற்கொண்டாா். எம்எல்ஏ அ.செ. வில்வநாதன், நகர திமுக செயலாளா் எம்.ஆா். ஆறுமுகம், வட்டாட்சியா் அனந்த கிருஷ்ணன், நகராட்சி ஆணையா் த. செளந்தரராஜன், பல்வேறு வணிகா் சங்கங்களின் பிரதிநிதிகள் உடனிருந்தனா்.

தொடா்ந்து ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வணிகா்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பொதுமக்கள் நலன் கருதி பஜாா் பகுதியில் கடைகள் திறப்பதை தவிா்க்க வேண்டுமென மாவட்ட வருவாய் அலுவலா் மற்றும் எம்எல்ஏ ஆகியோா் வணிகா்களிடையே கோரிக்கை விடுத்தனா். அதனால் பஜாா் பகுதியில் கடைகள் திறப்பதை சில நாட்களுக்கு தவிா்ப்பதாக வணிகா்கள் தெரிவித்தனா். தமிழக அரசால் மேலும் தளா்வுகள் அறிவிக்கப்படும் பட்சத்தில் கடைகள் திறப்பது குறித்து முடிவு செய்யலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

திருச்சூரில் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

SCROLL FOR NEXT