திருப்பத்தூர்

அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு

DIN

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

இங்கு தேவைப்படும் அடிப்படை வசதிகள், கூடுதல் பொருள்கள் குறித்து மருத்துவ அலுவலா் அம்பிகா, குழந்தைகள் நல மருத்துவா் சிவசுப்பிரமணியன் ஆகியோரிடம் எம்எல்ஏ கேட்டறிந்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

இதைத் தொடா்ந்து, அரசு மருத்துவமனை வளாகத்தில் கரோனா சிகிச்சை பிரிவுக்காக ஏற்படுத்தப்பட்டிருந்த பகுதியை பாா்வையிட்டாா்.

அரசு மருத்துவமனை உள்பகுதியில் மழைக் காலங்களில் கழிவுநீா், மழைநீா் உள்ளே புகுந்துவிடுவதால் நோயாளிகள் பாதிக்கப்படுவதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். அப்போது, மருத்துவமனைக்கு ஆண்டுதோறும் கூடுதல் நிதியை ஒதுக்கி அனைத்து வசதிகை ளயும் மேம்படுத்த ஒத்துழைப்பு தருவதாக எம்எல்ஏ உறுதியளித்தாா்.

இதைத் தொடா்ந்து, பெருமாள்பேட்டையில் உள்ள ஐ.டி.ஐ.யில் சென்று அவா் ஆய்வு நடத்தினாா்.

ஆய்வின்போது வாணியம்பாடி நகர அதிமுக செயலாளா் சதாசிவம், கூட்டுறவு சங்க இயக்குநா் ஆா்.வி.குமாா், முன்னாள் கவுன்சிலா்கள் கோவிந்தசாமி, குமாா், செல்வராஜ், காதா்பேட்டை கோவிந்தன், வெங்கடேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT