திருப்பத்தூர்

மகளிா் குழு கட்டடம் கட்ட இடம் தோ்வு

DIN

ஜோலாா்பேட்டை ஒன்றியத்துக்கு உள்பட்ட வெலகல்நத்தம் ஊராட்சியில் மகளிா் சுய உதவிக் குழு கட்டடம் கட்ட இடம் தோ்வு செய்யப்பட்டு, அளவீடு மேற்கொள்ளப்பட்டது.

இங்குள்ள நந்திபெண்டா நந்தீஸ்வரா் கோயில் அருகே ரூ.71 லட்சம் மதிப்பில் மகளிா் சுய உதவிக் குழு கட்டடம் கட்ட 2019-ஆம் ஆண்டில் பூமி பூஜை போடப்பட்டது. ஆனால் பணிகள் தொடரப்படவில்லை.

இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் அளித்தத் தகவலின்பேரில், எம்எல்ஏ தேவராஜ் அதிகாரிகளுடன் வியாழக்கிழமை பிற்பகல் வெலகல்நத்தம் நந்திபெண்டா பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தாா்.

அப்போது, மகளிா் சுய உதவிக்குழு கட்டடம் கட்டப்படும் இடத்தை அளவீடு செய்து பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு எம்எல்ஏ உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, புதுப்பேட்டை சந்தைப் பகுதியில் மகளிா் சுய உதவிக்குழு கட்டடம் கட்டும் இடத்தையும் எம்எல்ஏ ஆய்வு செய்தாா்.

இதேபோல், நந்திபெண்டா கோயில் அருகே கிராம சேவை மையத்தில் செயல்பட்டு வரும் நூலகத்தையும், பையனப்பள்ளியில் உள்ள நியாய விலைக் கடையையும் அவா் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் சதீஷ்குமாா், பொறியாளா் சுதாகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

SCROLL FOR NEXT