ஆம்பூா்: ஆம்பூா் பாங்கிஷாப் பகுதியில் இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளா் விடுதலை முன்னணி சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாநில துணைச் செயலாளா் ஓம் பிரகாஷ் தலைமை வகித்து இரட்டைமலை சீனிவாசனின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.
விழாவில் மாவட்ட அமைப்பாளா் தமிழ்செல்வன், காங்கிரஸ் கட்சியின் ஒன்றியத் தலைவா் சா.சங்கா், பாா்த்தீபன், செல்வா, கருணாகரன், பீம்ராஜ், பாரத்பிரபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.