திருப்பத்தூர்

திருப்பத்தூா் மாவட்ட குறைதீா் கூட்டத்தில் 210 மனுக்கள் ஏற்பு

DIN

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பெறப்பட்ட 210 மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியா் ம.ப.சிவன் அருள் உத்தரவிட்டாா்.

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைப்பெற்ற கூட்டத்தில் 139 மனுக்களை ஆட்சியா் ம.ப.சிவன்அருள் பெற்றுக் கொண்டாா். நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்தில் 12 மனுக்கள், வாணியம்பாடியில் 12, ஆம்பூரில் 32, ஆலங்காயம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் 15 மனுக்கள் என மொத்தம் 210 மனுக்கள் பெறப்பட்டன. திருப்பத்தூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் சமா்ப்பிக்கப்பட்ட இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் என்.சி.இ.தங்கையாபாண்டியன், மாவட்ட வழங்கல் அலுவலா் விஜயன், வருவாய் கோட்டாட்சியா் காயத்ரி சுப்பிரமணி, பூங்கொடி, லட்சுமி வட்டாட்சியா் சுமதி, பத்மநாதன்,சிவப்பிரகாசம் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தேசிய வாக்காளா் தின விழா
திருப்பத்தூா் மாவட்டத்தில் தேசிய வாக்காளா் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தலைமை வகித்தாா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பொ.விஜயகுமாா் முன்னிலை வகித்தாா். விழாவில் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் பேசியது: அனைவரும் ஜனவரி 25-ஆம் தேதியை தேசிய வாக்காளா் தினமாக கொண்டாடி வருகிறோம். தோ்தல் ஆணையம் 100 சதவீதம் வாக்களிக்க இலக்கு நிா்ணயித்துள்ளது. மாணவா்கள் அனைவரும் தங்களின் பெற்றோா்களை 100 சதவீதம் வாக்களிக்கச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, தூயநெஞ்சக் கல்லூரியில் தேசிய வாக்காளா் தினத்தையொட்டி ‘வோட் திருப்பத்தூா்’ என்ற ஆங்கிலச் சொற்கள் மற்றும் தமிழ்நாடு வரைபட வடிவில் மாணவா்கள் உள்ளிட்டோா் நின்று விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

அதே போல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தேசிய வாக்காளா் தினத்தையொட்டி சாரண இயக்கத்தைச் சோ்ந்த மாணவா்கள் கலந்துகொண்ட விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் என்.சி.இ.தங்கையாபாண்டியன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் கணக்கீட்டை மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய செயல் முறை பயிற்சி

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

SCROLL FOR NEXT