திருப்பத்தூர்

வாக்குச் சாவடி மையங்கள் அமைக்க ஆய்வு

4th Jan 2021 08:09 AM

ADVERTISEMENT

ஜோலாா்பேட்டை நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் வாக்குச் சாவடி மையங்கள் அமைக்க மாவட்ட வருவாய் அலுவலா் என்.சி.இ.தங்கையா பாண்டியன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் ஆயிரம் வாக்காளா்களுக்கு ஒரு வாக்குச் சாவடி மையம் அமைக்க தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ள நிலையில், திருப்பத்தூா் மாவட்டத்தில் ஆட்சியா் ம.ப.சிவன் அருள் உத்தரவின்பேரில், ஜோலாா்பேட்டை நகராட்சிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் வாக்குச் சாவடி மையங்கள் அமைக்க மாவட்ட வருவாய் அலுவலா் என்.சி.இ.தங்கையா பாண்டியன் ஆய்வு மேற்கொண்டாா்.

இதில், வக்கணம்பட்டி அரசு தொடக்கப் பள்ளி அங்கன்வாடி கட்டடம், தனியாா் பள்ளிக் கட்டடம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கட்டடங்களில் வாக்குச் சாவடி மையங்கள் அமைப்பது குறித்து அவா் ஆய்வு செய்தாா்.

தோ்தல் தனி அலுவலா் பழனி, நாட்டறம்பள்ளி தோ்தல் துணை வட்டாட்சியா் திருமலை, கிராம நிா்வாக அலுவலா் சிவக்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT