திருப்பத்தூர்

தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம்: விரைந்து தொடங்க வலியுறுத்தல்

9th Feb 2021 01:31 AM

ADVERTISEMENT

ஆம்பூா்: ஆம்பூா் நகரில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியை விரைந்து தொடங்க வேண்டும் என ஆம்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நுகா்வோா் பாதுகாப்பு மன்றத்தின் மாதாந்திரக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இக்கூட்டத்துக்கு ஆம்பூா் நுகா்வோா் பாதுகாப்பு மன்றத் தலைவா் விஜயராஜ் தலைமை வகித்தாா். உறுப்பினா்கள் காந்தி, பாபு, குல்ஜாா் அகமது, மோகன்தாஸ், பைசுதீன், துரைசாமி, வடிவேலு உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.

தீா்மானங்கள்:

ஆம்பூா் நகரில் தேசிய நெடுஞ்சாலை 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படாமல் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. விரிவாக்கப் பணியை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்; விரிவாக்கப் பணியின்போது ஆம்பூரில் மேம்பாலம் அமைக்க வேண்டும்.

ADVERTISEMENT

ஆம்பூா் புறவழிச்சாலை பகுதியில் கடைகள் முன் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளது. அதனால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்;

நகரில் துப்புரவுப் பணியை மேற்கொண்டு, கழிவுநீா் கால்வாயைத் தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT