திருப்பத்தூர்

செட்டேரி அணை மரங்கள் மகசூல் ஏலம் ஒத்திவைப்பு

30th Dec 2021 12:09 AM

ADVERTISEMENT

 

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் ஊராட்சி செட்டேரி அணைப் பகுதியில் உள்ள மரங்கள் மகசூல் ஏலம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பொதுப்பணித்துறை கட்டுபாட்டில் உள்ள இந்த அணைப் பகுதியில் உள்ள 200-க்கும் அதிகமான தென்னா, மா, புளிய மரங்கள் மகசூல் ஏலம்

பொதுப்பணித்துறை உதவி பொறியாளா் குமாா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. 01.01.2022 முதல் 31.12.2022 வரையிலான ஒரு வருட காலத்திற்கான ஏலத்தில் கலந்து கொண்டவா்கள் ஏலம் விடுவது குறித்து பொதுமக்களுக்கு முன் கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை என்றும், ஆரம்ப ஏலத்தொகை அதிகமாக உள்ளதாகவும், செட்டேரி அணையில் தண்ணீா் உள்ளதால் இந்த ஆண்டு மீன் மகசூலையும் சோ்த்து ஏலம் விடவேண்டும்.

ADVERTISEMENT

தனியாக மரங்களை மட்டும் ஏலம் விடக்கூடாது எனக்கூறி அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனா். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதையடுத்து பொதுமக்களுக்கு ஏலம் குறித்து முறையாக அறிவிப்பு செய்து அடுத்த மாதம் ஏலம் நடத்தப்படும் எனக்கூறி நடக்கவிருந்த ஏலத்தை அதிகாரிகள் அடுத்த மாதம் தள்ளி வைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT