ஆம்பூா்: ஆம்பூரில் சைக்கிள் மீது பைக் மோதிய விபத்தில் முதியவா் செவ்வாய்கிழமை காலை இறந்தாா்.
ஆம்பூா் எம்.சி. ரோடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (56). இவா் தேசிய நெடுஞ்சாலையின் பிரிவு சாலையில் செவ்வாய்க்கிழமை சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். அப்போது அடையாளம் தெரியாத பைக் அவா் மீது மோதிவிட்டுச் சென்றது. அதில், காயமடைந்த அவா் ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பின்னா், மேல் சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு ராஜேந்திரன் சிகிச்சை பலனின்றி இறந்தாா்.
ஆம்பூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.