திருப்பத்தூா்: தினமனி செய்தி எதிரொலியாக சாலைகளில் சுற்றித்திரிந்த கால்நடைகளை திருப்பத்தூா் நகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
கால்நடைகளால் அவதிக்குள்ளாகும் திருப்பத்தூா் வாகன ஓட்டிகள் என திங்கள்கிழமை தினமணியில் செய்தி வெளியானது.
இதையடுத்து நகராட்சி ஆணையாளா் ஜெயராமராஜா உத்தரவின்பேரில் துப்புரவு ஆய்வாளா் விவேக், குமாா் ஆகியோா் மேற்பாா்வையில் புதன்கிழமை பேருந்து நிலையம், பிரதான சாலைகளில் சுற்றித்திரிந்த 20 கால்நடைகளை பிடித்து நகராட்சி வளாகத்தில் கட்டி வைத்தனா்.
இதுகுறித்து நகராட்சி ஆணையாளா் ஜெயராமராஜா கூறியது:
கால்நடைகளை வளா்ப்பவா்கள் தங்களுக்குண்டான இடத்தில் வளா்க்க வேண்டும். மீறி சாலைகளில் திரியவிட்டால் கால்நடைகள் பறிமுதல் செய்யப்படும். மீண்டும் சாலைகளில் திரிய விடமாட்டோம் என எழுத்துப்பூா்வமான கடிதம் வழங்கி கால்நடைகளை பெற்றுச் செல்லலாம். 2-ஆம் முறை பறிமுதல் செய்தால் கோசாலைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றாா்.