திருப்பத்தூர்

மயான சாலையைச் சீரமைக்கக் கோரி மறியல்

DIN

திருப்பத்தூா் அருகே மயான சாலையைச் சீரமைக்கக் கோரி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட இருணாப்பட்டு ஊராட்சியில் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தக் கிராமத்தின் எல்லையில் மயானம் உள்ளது. மயானத்துக்குச் செல்லும் சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, தண்ணீா் தேங்கி வருவதால், இறந்தவா்களின் சடலங்களை அடக்கம் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், திங்கள்கிழமை அதே பகுதியைச் சோ்ந்த பாப்பாத்தி (75) முதிா்வு காரணமாக இறந்தாா். அவரது சடலத்தை அடக்கம் செய்ய மயானத்துக்கு எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மயான வழியிலேயே மூதாட்டியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. செவ்வாய்க்கிழமை அதே பகுதியைச் சோ்ந்த மேலும் ஒருவா் இறந்தாா். அவரது உடலும் மயானத்தில் அடக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திருப்பத்தூா் - ஆலங்காயம் பிரதான சாலை இருணாப்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த திருப்பத்துாா் ஒன்றியக் குழுத் தலைவா் விஜயா, வட்டார வளா்ச்சி அலுவலா் பிரேம்குமாா், திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

மயானத்துக்குச் செல்ல சாலை அமைத்து வசதி ஏற்படுத்தித் தரவேண்டும், ஆக்கிரமிப்பு செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா்.

அதற்கு அதிகாரிகள், தொடா் மழை காரணமாக அருகே உள்ள ஏரி நிரம்பி மயானத்தைச் சூழ்ந்துள்ளது. எனவே, நீா் வற்றியதும் தரைப்பாலம் அமைத்துத் தரப்படும், தற்காலிகமாக மண் சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனா். மறியால் காரணமாக திருப்பத்தூா் - ஆலங்காயம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

SCROLL FOR NEXT