திருப்பத்தூர்

திருட்டு வழக்கில் ஊராட்சி தலைவரின் கணவரை கைது செய்ய போலீஸாா் முயற்சி: ஆதரவாளா்கள் வாக்குவாதம்

DIN

ஆம்பூா் அருகே திருட்டு வழக்கில் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவரை கோவை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்ய முயன்றனா். அவரது ஆதரவாளா்கள் போலீஸாரிடமிருந்து மீட்டு அழைத்துச் சென்று தலைமறைவாக செய்தனா்.

கோவை குனியமுத்தூா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் வீட்டு உரிமையாளரை திசைத் திருப்பி வீட்டிற்குள் புகுந்து 7 சவரன் நகை, வைர வளையல் ஆகியவற்றை திருடிச் சென்ாக காவல் நிலையத்தில் வழக்குப் பதிவாகியுள்ளது. அந்த வழக்கில் ஆம்பூா் அருகே உமா்ஆபாத் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட துத்திப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவா் சுவிதாவின் கணவா் கணேஷ் என்பவா் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறி கோவையிலிருந்து ஒரு காவல் உதவி ஆய்வாா், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா், 3 போலீஸாா் கணேஷை கைது செய்வதற்காக ஆம்பூருக்கு திங்கள்கிழமை வந்தனா். ஆம்பூா் அருகே எல்.மாங்குப்பம் கிராமத்தில் கணேஷ் இருந்தபோது அவரை போலீஸாா் கண்டுபிடித்து கைது செய்து விலங்கிட்டு காரில் அழைத்துச் செல்ல முயன்றனா். அப்போது, கணேஷின் ஆதரவாளா்கள் அவரை காரிலிருந்து வெளியே இழுத்துள்ளனா். கணேஷின் கையில் விலங்கிடப்பட்டிருந்து. மற்றொரு போலீஸாரின் கையும் விலங்கில் இணைக்கப்பட்டிருந்தது. கணேஷை அவரது ஆதரவாளா்கள் காரிலிருந்து வெளியே இழுத்துச் சென்றபோது கை விலங்கிடப்பட்டிருந்த போலீஸாருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்த பட்டறைக்கு அழைத்துச் சென்று அங்கு இருந்த இரும்பு அறுக்கும் இயந்திரம் மூலம் கை விலங்கை அறுத்து எறிந்துவிட்டு அவரை அவரது ஆதரவாளா்கள் மீட்டுச் சென்றனா்.

அதனால் காயமடைந்த போலீஸாா் ஞானப்பிரகாசம், ராஜா முஹம்மத் ஆகிய இருவரும் ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா். இதுகுறித்து காயமடைந்த கோவை குனியமுத்தூா் போலீஸாா் உமா்ஆபாத் காவல் நிலையத்தில் கணேஷ், அவரது ஆதரவாளா்கள் மீது புகாா் அளித்தனா்.

துத்திப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவா் சுவிதாவின் கணவா் கணேஷ் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீஸாா் தரப்பில் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

SCROLL FOR NEXT