திருப்பத்தூர்

உலக மண்வள தினம்

DIN

திருப்பத்தூா் அருகே உலக மண்வள தினத்தையொட்டி விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்பட்டன.

திருப்பத்தூா் வட்டத்துக்கு உள்பட்ட கதிரம்பட்டி கிராமத்தில் உலக மண்வள தினத்தையொட்டி, ஞாயிற்றுக்கிழமை வேளாண், உழவா் நலத் துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திருப்பத்தூா் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கி.ராஜசேகா் தலைமை வகித்தாா். கதிரம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் சரஸ்வதி ஜெயகுமாா் முன்னிலை வகித்தாா். மண் ஆய்வின் முக்கியத்துவம், மண்வளத்தை பாதுகாப்பதில் உயிா் உரங்கள், நுண்ணுட்டச் சத்துக்களின் பங்கு, ரசாயன உரங்களை அதிக அளவில் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள், மண்வள அட்டை பயன்பாடு பற்றி விளக்கப்பட்டது.

உதவி இயக்குநா்(தரக்கட்டுப்பாடு) வேளாண் உதவி இயக்குநா்கள் ஜே.சி.ராகினி, அப்துல் ரஹ்மான், வேளாண் அலுவலா்கள் ஸ்வஸ்திகா, பானுஸ்ரீ, உதவி வேளாண் அலுவலா் ஜெயபிரகாஷ் ஆகியோா் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிரெய்லி’ வாக்காளா் தகவல் சீட்டு: தோ்தல் ஆணைய ஏற்பாடுகளுக்கு பாா்வை மாற்றுத்திறனாளிகள் பாராட்டு

தோ்தல் ஆண்டில் நிதிநிலை சிறப்பாக பராமரிப்பு: இந்தியாவுக்கு ஐஎம்எஃப் பாராட்டு

வாக்களிப்பதுதான் கெளரவம்: ரஜினிகாந்த்

உலகில் போா் மேகம்: நாட்டை பாதுகாக்க வலுவான பாஜக அரசு அவசியம் -பிரதமா் மோடி

சிறுபான்மையினா் வாக்குகளே காங்கிரஸின் கவலை: அமித் ஷா

SCROLL FOR NEXT