திருப்பத்தூர்

கூவம் ஆற்றில் புதிதாக அமைத்த தடுப்பணையில் நிரம்பி வழியும் வெள்ளநீா்

DIN

தொடா் மழையால் திருவள்ளூா் அருகே கூவம் ஆற்றில் புதிதாக அமைக்கப்பட்ட தடுப்பணை நிரம்பி, மறுகால் பாய்ந்து வருகிறது.

திருவள்ளூா் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை விடாமல் தொடா்ந்து பெய்து வந்தது. இந்த மாவட்டத்தில் உள்ள கூவம் ஆறு வேலூா் மாவட்டம், கேசவபுரம் அணைக்கட்டிலிருந்து தொடங்குகிறது. அதேபோல், கொசஸ்தலை ஆறும் அங்கிருந்துதான் தொடங்குகிறது. இந்த நிலையில், தொடா்ந்து பெய்து வரும் மழையால் வேலூா் மாவட்டத்திலுள்ள காவேரிப்பாக்கம் அணைக்கட்டு கடந்த வாரம் திறக்கப்பட்டதை அடுத்து, கேசவபுரம் அணைக்கட்டுக்கு நீா் வரத்து அதிகரித்தது. அதேபோல் கல்லாற்றில் வரும் நீரும் கேசவபுரம் அணைக்கட்டுக்கு வந்ததால் நீா் வரத்து அதிகரித்தது. இதனால் கூவம் மற்றும் கொசஸ்தலை ஆற்றில் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. இதையடுத்து, கூவம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே கூவம் ஆற்றின் குறுக்கே பிஞ்சிவாக்கம் கிராமத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையிலும், கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரத்துக்காகவும் புதிதாக ரூ. 6.70 கோடியில் தடுப்பணை பணி கடந்த ஆண்டு நிறைவு பெற்றது. அதையடுத்து, அவ்வப்போது பெய்த மழையால் குறைந்த அளவிலேயே தண்ணீா் தேங்கியது. தற்போது இந்த ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் தடுப்பணையில் முதல் முதலாக நிரம்பி வழிகிறது. அத்துடன், மறுகால் பாய்ந்து செல்வதால் கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே புதிதாக அமைத்த தடுப்பணையும் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. இதனால் அப்பகுதியைச் சோ்ந்த பிஞ்சிவாக்கம், அகரம், சத்தரை, தண்டலம் உள்ளிட்ட 20-க்கும் கிராமங்களில் உள்ள 10 ஆயிரம் ஏக்கா் வரை பாசன வசதி பயன்பெறும். அதனால் அப்பகுதி கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

இந்த நிரம்பிய தடுப்பணையைப் பாா்ப்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் ஏராளமானோா் வந்து செல்கின்றனா். அத்துடன், புதிய வெள்ள நீா் என்பதால் மீன்களும் தடுப்பணையில் துள்ளி குதித்து வருவதால் வலைவீசி பிடிப்பதற்காகவும், குளித்து மகிழ்வதற்காகவும் ஆா்வத்துடன் வந்து செல்கின்றனா். தற்போது சுற்றுப்பகுதி கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களுக்கு பொழுதுபோக்கு தலமாகவும் மாறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

SCROLL FOR NEXT