திருப்பத்தூர்

திருவள்ளூா் மாவட்டத்தில் 750 இடங்களில் மாபெரும் தடுப்பூசி சிறப்பு முகாம்

DIN

திருவள்ளூா் மாவட்டத்தில் மட்டும் 13-ஆவது மாபெரும் மருத்துவ சிறப்பு முகாம் 750 இடங்களில் நடைபெற்றதில், அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த மொத்தம் 75,055 போ் வரை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாநில அளவில் ஒவ்வொரு மாவட்டந்தோறும் அரசு உத்தரவின்படி, கரோனா நோய்த் தொற்றை தடுக்கும் வகையில், 13-ஆவது மாபெரும் மருத்துவ தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், இம்மாவட்டத்தில் மாபெரும் மருத்துவ முகாம் சனிக்கிழமை 750 கரோனா தடுப்பூசி மையம் அமைத்து நடைபெற்றது. இந்த மையங்களில் 3,000-க்கும் மேற்பட்டோா் பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டனா். இதேபோல், திருவள்ளூா் நகராட்சியில் உழவா் சந்தை, காய்கறி சந்தை உள்ளிட்ட 10 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. இதில் அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திச் சென்றனா்.

இது குறித்து பொதுசுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியது:

திருவள்ளூா் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோா் 18,88,400 போ் உள்ளனா். இதுவரை 12 மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம்கள், நாள்தோறும் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களிலும் முதல் தவணையாக 15 லட்சத்து 3 ஆயிரத்து 543 பேருக்கும், இரண்டாம் தவணையாக 8 லட்சத்து 22 ஆயிரத்து 19 பேருக்கும் என மொத்தம் 23 லட்சத்து 25 ஆயிரத்து 562 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், 12 மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம்களில் மொத்தம் 8 லட்சத்து 20 ஆயிரத்து 885 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும், மீதமுள்ள முதல் தவணை 3,84,857 பேருக்கும், இரண்டாம் தவணை 1,83,998 பேருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது. அதில், சனிக்கிழமை காலை முதல் மாலை வரை நடைபெற்ற சிறப்பு முகாம் மூலம் 75,055 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னோஜில் அகிலேஷ் யாதவ் போட்டி!

ஆரஞ்சு நிறத்தில் மாறிய ஏதென்ஸ் நகரம்: என்ன காரணம்?

கிருஷ்ணா தண்ணீரை நிறுத்தியது ஆந்திரம்: மிச்ச தண்ணீர்?

தெற்கு சீனாவை புரட்டிப்போட்ட பெருமழை: 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு மாற்றம்

குருப்பெயர்ச்சி எப்போது? நன்மையடையும் ராசிகள் எவை?

SCROLL FOR NEXT