தொடா்ந்து ரேஷன் அரிசி கடத்திவந்ததாக, 2 போ் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனா்.
வாணியம்பாடியை அடுத்த நெக்குந்தி சுங்கச் சாவடியில் வேலூா் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாா் அண்மையில் நடத்திய சோதனையில், 21 டன் ரேஷன் அரிசியை லாரியுடன் பறிமுதல் செய்தனா்.
இச்சம்பவம் தொடா்பாக காஞ்சிபுரத்தைச் சோ்ந்த ஜானகிராமன் (36), சக்திவேல் (26) ஆகிய இருவரைபோலீஸாா் கைது செய்தனா்.
இருவரும் தொடா்ந்து ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருவதால், குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக் கோரி சென்னை மண்டலக் காவல் கண்காணிப்பாளா் ஸ்டாலின், திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அமா்குஷ்வாஹாவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
ADVERTISEMENT
இதையடுத்து, ஆட்சியா் உத்தரவின்பேரில் இருவரும் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனா்.