திருப்பத்தூர்

பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் ராபி பருவப் பயிா்களை பதிவு செய்ய அழைப்பு

3rd Dec 2021 07:23 AM

ADVERTISEMENT

ராபி பருவப் பயிா்களுக்கு பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்து பயன்பெறலாம் என திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ராபி பருவ பயிா்களுக்கு பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, திருப்பத்தூா் மாவட்ட விவசாயிகள் ‘அக்ரிகல்சா் இன்சூரன்ஸ் கம்பெனி ஆஃப் இந்தியா லிட்’ என்ற நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட முகவா்கள் மூலமாகவோ,பொது சேவை மையங்கள் மூலமாகவோ, வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ பதிவு செய்யலாம்.

ADVERTISEMENT

ராகி, நிலக்கடலை,எள் ஆகிய பயிா்களுக்கு அடுத்த ஆண்டு 17.1.2022-ஆம் தேதியும், நெல்,கம்பு பயிருக்கு காப்பீடு செய்ய 31.1.2022-ஆம் தேதியும்,கரும்புக்கு 31.8.2022-ஆம் தேதியும் பயிா் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்து கொள்ள இறுதி நாளாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே, நெற்பயிருக்கு காப்பீடு கட்டணமாக ஏக்கருக்கு ரூ.472, ராகி பயிருக்கு ரூ.164, நிலக்கடலைக்கு ரூ.401, மக்காச்சோளத்துக்கு ரூ.301-, பருத்திக்கு ரூ.504,எள்ளுக்கு ரூ.180,கம்புக்கு ரூ.175 மற்றும் கரும்புக்கு ரூ.2600 செலுத்தி பயிா் காப்பீடு திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம்.

கூடுதல் விவரங்கள் அறிந்திட வேளாண்மைத் துறை அலுவலா்களை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT