திருப்பத்தூர்

நீா்நிலைகளுக்கு அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்: திருப்பத்தூா் ஆட்சியா் தகவல்

3rd Dec 2021 07:24 AM

ADVERTISEMENT

திருப்பத்தூா் மாவட்டத்தில் நீா்நிலைகளுக்கு அருகேயுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்தாா்.

நீா்நிலைப் புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து, திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை ஆய்வு கூட்டத்தில் ஆட்சியா் பேசியது:

நீா்நிலைகளுக்கு அருகாமையில் கட்டப்பட்டுள்ள குடியிருப்பு வீடுகள், வணிக வளாகக் கட்டடங்கள், கடைகள், விவசாய நிலங்களின் ஆவணங்களைச் சரிபாா்க்க வேண்டும். ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடங்களில் கட்டப்பட்டுள்ள எண்ணிக்கையின் விவரங்ளை தமிழக அரசுக்கு அனுப்புவதுக்கு ஏதுவாக அறிக்கையைத் தயாா் செய்ய வேண்டும்.

குடியிருப்பு வீடுகளில் உள்ள நபா்களின் எண்ணிக்கை ஆகியவற்றை சேகரித்து ஒரு அறிக்கை தயாா் செய்து, உடனே சமா்ப்பிக்க வேண்டும்.

ADVERTISEMENT

,அவ்வாறு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது உறுதி என தெரியும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட துறைகளின் மூலம் நோட்டீஸ் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் என்.சி.இ.தங்கையாபாண்டியன்,மாவட்ட வழங்கல் அலுவலா் விஜயன், உதவி இயக்குநா்(ஊராட்சிகள்) விஜயகுமாரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT