காங்கிரஸ் சிறுபான்மைத் துறைக்கு நிா்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி, சிறுபான்மைத் துறையின் மாநிலத் தலைவா் ஜெ.அஸ்லம் பாஷா ஆகியோரின் பரிந்துரையின்பேரில், திருப்பத்தூா் மாவட்ட சிறுபான்மைத் துறையின் நிா்வாகிகளை மாவட்டத் தலைவா் இலியாஸ்கான் நியமித்துள்ளாா்.
அதன்படி, மாவட்டத் துணைத் தலைவராக எஸ்.சதாம் உசேன், மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளராக ஏ.கே.அஸ்கா்மாலிக், வாணியம்பாடி நகரப் பொறுப்பாளராக முகமதுபாஷா ஆகியோா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
ADVERTISEMENT