திருப்பத்தூர்

ஊருக்குள் புகுந்த பாம்புகள்

3rd Dec 2021 07:21 AM

ADVERTISEMENT

ஆம்பூா் அருகே கிராமப் பகுதிகளில் நுழைந்த 2 பாம்புகள் வியாழக்கிழமை பிடிபட்டன.

அரங்கல்துருகத்தில் மலைப்பாம்பு:

ஆம்பூா் அருகே அரங்கல்துருகம் ஊராட்சியில் உள்ள சுட்டகுண்டா கிராமத்தில் வியாழக்கிழமை காலை ஜெயச்சந்திரன் என்பவரின் மாட்டுக் கொட்டகை அருகே சுமாா் 8 அடி நீள மலைப்பாம்பு ஊா்ந்து சென்றது.

இதைக் கண்ட அந்தப் பகுதி பொதுமக்கள் ஆம்பூா் வனசரகா் (பொறுப்பு) இளங்கோவனுக்கு தகவல் கொடுத்தனா். அவரது உத்தரவின்பேரில், வனக்காப்பாளா் ராஜ்குமாா் அங்கு சென்று பொதுமக்கள் உதவியுடன் மலைப்பாம்பை மீட்டு காரப்பட்டு வனப் பகுதியில் கொண்டு சென்று விட்டனா்.

ADVERTISEMENT

மிட்பாளத்தில் நாகப்பாம்பு: ஆம்பூா் அருகேயுள்ள மிட்டாளம் ஊராட்சி பைரப்பள்ளி.கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி கமலநாதன் (35).

வியாழக்கிழமை காலை இவரது நிலத்துக்குள் 6 அடி நீள நாகப் பாம்பு சென்றது. தகவலின்பேரில் ஆம்பூா் வனத் துறையினா் அங்கு சென்று, பாம்பைப் பிடித்துச் சென்று வனப் பகுதியில் விட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT