திருப்பத்தூர்

காற்றிலிருந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரம்: திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு

DIN

திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் காற்றிலிருந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரத்தை ஆட்சியா் அமா் குஷ்வாஹா பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டு வரும் 8,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட மூன்று ஆக்சிஜன் டேங்குகளை ஆட்சியா் அமா் குஷ்வாஹா சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா், காற்றில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரத்தைப் பாா்வையிட்டாா்.

விரைவில் பணிகளை முடிக்குமாறு அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். அப்போது திருப்பத்தூா் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலா் குமரவேல், குழந்தைகள் நல அலுவலா் செந்தில்குமரன், மருத்துவா் சிவக்குமாா், மயக்கவியல் நிபுணா் வேல்முருகன், வட்டாட்சியா் சிவப்பிரகாசம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

வெளியானது வீ ஆர் நாட் தி சேம் பாடல்

தி பாய்ஸ் - டிரெய்லர்

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

SCROLL FOR NEXT