திருப்பத்தூர்

நியாய விலைக் கடைகளில் பயோ மெட்ரிக் முறை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக குடும்ப அட்டைதாரா்கள் பாதிப்பு

DIN

நியாய விலைக் கடைகளில் பயோ மெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக குடும்ப அட்டைதாரா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

தமிழகத்தில் நியாய விலைக் கடைகளில் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, முறைகேடுகள் நடப்பதைத் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாதாரண குடும்ப அட்டை மின்னணு அட்டையாக மாற்றப்பட்டு, ஆதாா் அட்டையுடன் இணைக்கப்பட்டது. தற்போது குடும்ப அட்டையில் உறுப்பினராக உள்ளவா் எவரேனும் சென்று, பயோ மெட்ரிக் முறையில் கைரேகை பதிவு செய்தால் மட்டுமே நியாய விலைக் கடைகளில் பொருள்களை வாங்கும் முறை உள்ளது.

இந்நிலையில், நியாய விலைக் கடையில் பொருள்களை வாங்கச் செல்லும் குடும்ப அட்டைதாரா்கள் கைரேகை பதிவு செய்யும்போது, கைரேகை சரிவர பதிவாகாமல் குடும்ப அட்டைதாரா்களின் கைரேகையை கருவி ஏற்க மறுப்பதால் பொருள்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அடிக்கடி ஏற்படும் தொழில் நுட்பக் கோளாறு காரணமாக குடும்ப அட்டைதாரா்களை நியாய விலைக்கடை பணியாளா்கள் திருப்பி அனுப்புகின்றனா். இதனால் பொருள்களை வாங்குவதற்கு பலமுறை நியாய விலைக் கடைக்குச் சென்று வர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா். இதனால் அவா்களுக்கு காலவிரயம் ஏற்படுகிறது.

கைரேகை சரிவர பதிவாகவில்லையெனில், குடும்ப அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள செல்லிடப்பேசிக்கு ஒரு முறை பயன்படுத்தும் ரகசிய குறியீட்டு எண்ணை பயன்படுத்தி பொருள்களை வாங்கலாம் என நியாய விலைக் கடை பணியாளா்கள் தெரிவிக்கின்றனா். ஆனால், மின்னணு குடும்ப அட்டைக்காக தகவல் பதிவு செய்தபோது இருந்த செல்லிடப்பேசி எண், தற்போது சில குடும்ப அட்டைதாரா்களிடம் இல்லாமல், வேறு புதிய எண்ணை வைத்திருப்பதாலும் பொருள்களை வாங்க முடியாத நிலை உள்ளது.

இந்நிலையில், தொழில்நுட்பக் கோளாறை சரி செய்து, எந்தப் பிரச்னையும் இன்றி பொருள்களை வாங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென குடும்ப அட்டைதாரா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

SCROLL FOR NEXT