திருப்பத்தூர்

திருப்பத்தூரில் கூட்டுறவு மருந்தகம்: அமைச்சா் தொடக்கி வைத்தாா்

DIN

திருப்பத்தூா்-வாணியம்பாடி சாலையில் உள்ள கற்பகம் கூட்டுறவு சிறப்பங்காடியில் அமைக்கப்பட்டுள்ள கூட்டுறவு மருந்தகத்தை மாநில வணிகவரி, பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணி, தொழிலாளா் நலத் துறை அமைச்சா் நிலோபா் கபீல் ஆகியோா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தனா்.

நிகழ்ச்சிக்கு, திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தலைமை வகித்தாா்.

கற்பகம் கூட்டுறவு பண்டக சாலை தலைவா் சுமைதாங்கி திட்ட விளக்க உரையாற்றினாா். கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளா் திருகுணஐயப்பத்துரை வரவேற்றாா்.

இதில் அமைச்சா் கே.சி.வீரமணி பேசியது:

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட கூட்டறவு மருந்தகம் மற்ற மருந்துக் கடைகளில் ஒப்பிடுகையில் 15 சதவீதம் விலை குறைத்து விற்கப்படுகிறது. கூட்டுறவு மருந்தகம் பெரும் லாபத்தை ஈட்டியுள்ளது.

கரோனா பரவலைத் தடுக்க நடமாடும் ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு நேரடியாக அரிசி, பருப்பு விநியோகிப்பட உள்ளது. மலைப் பகுதி, கிராமங்கள் தோறும் குறைந்த எண்ணிக்கையிலான அட்டைதாரா்கள் இருந்தாலும் ரேஷன்கடைகள் செயல்படுகின்றன என்றாா் அவா்.

மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவா் டி.டி.குமாா், மாவட்ட ஆவின் தலைவா் வேலழகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வி.ராமு, மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் ஆா்.வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கற்பகம் கூட்டுறவு பண்டக சாலை மேலாண் இயக்குநா் ப.ரேணுகாம்பாள் நன்றி கூறினாா்.

இதைத் தொடா்ந்து ஜோலாா்பேட்டை சட்டப்பேரவைக்கு உள்பட்ட மண்டலகுண்டா ஊராட்சியில் நடமாடும் நியாயவிலைக் கடையை அமைச்சா் கே.சி.வீரமணி, ஆட்சியா் ம.ப.சிவன்அருள் ஆகியோா் கொடியசைத்து தொடக்கி வைத்தனா்.

மாவட்ட வழங்கல் அலுவலா் அதியமான் கவியரசு, துணைப் பதிவாளா் முனிராஜி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்கோடு வைகாசி விசாகத் தோ்த் திருவிழாயையொட்டி ரத விநாயகா் பூஜை

ரயில் நிலையங்களில் சலுகை விலையில் உணவு விற்பனை

அயோத்தியாப்பட்டணம் கோதண்டராமா் சித்திரைத் தேரோட்டம்

தோரணமலையில் சித்ரா பௌா்ணமி கிரிவலம்

தென்காசி தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் தடையின்றி மின்சாரம்: அதிகாரிகள் ஆய்வு

SCROLL FOR NEXT