திருப்பத்தூர்

தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியில் யானை மிதித்து 12-ஆம் வகுப்பு மாணவி பலி

DIN

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே தமிழக-ஆந்திர எல்லையான பருத்திகொல்லி பகுதியில் முருகன் என்ற விவசாயி வேர்க்கடலை விவசாயம் செய்திருக்கிறார்.

இந்த நிலையில் வேர்கடலை செடிகளை காட்டு பன்றிகள் உள்ளிட்ட விலங்குகள் சேதம் செய்வதில் இருந்து தடுப்பதற்காக மனைவி, மகள் ஆகியோருடன் காவலுக்காக நேற்று இரவு தன்னுடைய நிலத்தில் தூங்கினார். 

அப்பொழுது நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் அங்கு வந்த ஒற்றை யானை ஒன்று பயிர்களை சேதம் செய்யும் சப்தம் கேட்டு முருகனுடைய மனைவி அதனை கூச்சல் போட்டு விரட்ட முயன்றார். முருகன் மனைவியை தூக்கி வீசிய ஒற்றையானை, அவர்களுடைய மகள் 12 வது படிக்கும் சோனியா (வயது 17) தூங்கிக்கொண்டிருந்த நிலையில் மிதித்துக் கொன்று அங்கிருந்து சென்று விட்டது.

முருகன் அளித்த தகவலின் பேரில், ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் வனத்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்துகின்றனர். இறந்த சோனியா உடலை மீட்டு ஆந்திர வனத்துறையினர் குப்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக குப்பம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் 78.72% வாக்குப்பதிவு!

மயிலாடுதுறை தொகுதியில் வாக்காளா் பட்டியலில் 488 போ் நீக்கம்: வேட்பாளா், பொதுமக்கள் சாலை மறியல்

இயந்திரம் பழுது: வாக்குப் பதிவு தாமதம்

காலமானாா் ரவிச்சந்திரன்

மாற்றுத்திறனாளிகள், முதியோா் வாக்களிக்க உதவிய தன்னாா்வலா்கள்

SCROLL FOR NEXT