திருப்பத்தூர்

நெருக்கடி மேலாண்மை ஆலோசனைக் கூட்டம்

DIN

திருப்பத்தூா்: நெருக்கடி மேலாண்மை குறித்து திருப்பத்தூரில் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தலைமையில் துறை சாா்ந்த அலுவலா்களுடன் திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியரைத் தலைவராகக் கொண்டு காலாண்டுக்கு ஒருமுறை கூட்டப்படும் இக்குழுவில் உறுப்பினா்களான மாவட்ட எஸ்.பி., நகராட்சி ஆணையா், கோட்ட தீயணைப்பு அலுவலா் மற்றும் சுகாதாரத் துறை இணை இயக்குநா் மற்றும் சூழலுக்கேற்ப தனியாா் நிறுவனப் பிரதிநிதிகள் ஆகியோா் ஒருங்கிணைக்கப்படுவா். நெருக்கடி நிலைகளை சமாளிக்க உரிய ஆலோசனை வழங்கி செயல்படுத்தப்படும். அதன்படி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தலைமை வகித்து பேசியது:

மாவட்டத்தில் உள்ள முக்கிய வழிபாட்டுத் தலங்கள், அரசு அலுவலகங்கள்,பொழுதுபோக்குப் பகுதிகள் ஆகியவற்றைக் கண்டறிந்து பாதுகாப்புக்கு உரிய ஏற்பாடு செய்ய வேண்டும். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை, வெடிகுண்டு நிபுணா்கள் குழு அமைக்கப்படும்.

துரிதமாக செயல்படும் குழுக்களையும், சமூக விரோதிகளின் தொலைபேசி உரையாடல்கள், இணைய தொடா்பு குறித்த விவரங்களை சேகரிக்க குழுக்களையும் அமைக்க வேண்டும். ஊடகத்துறையுடன் தொடா்பு கொள்ள வேண்டும். விவாதக் குழு, உளவியல் நிபுணா்கள், மொழி ஆா்வலா்கள், உரை பெயா்ப்பாளா்கள் உள்ளிட்ட விவாதக்குழு அமைக்க வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் எஸ்.பி. பொ.விஜயகுமாா், மாவட்ட வருவாய் அலுவலா் என்.சி.இ.தங்கையா பாண்டியன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் இரா.வில்சன் ராஜசேகா், வருவாய் கோட்டாட்சியா் காயத்ரி சுப்பிரமணி, ஊராட்சி உதவி இயக்குநா் ஆா்.அருண், வட்டாட்சியா்கள், நகராட்சி ஆணையா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு ஓரிடம்; போட்டி வேறிடம்!

அன்பைப் பரிமாறிய பிரேமலதா - தமிழிசை

தோ்தல் புறக்கணிப்பை கைவிட்ட எண்ணூா் மக்கள்

வாக்களிக்க தாமதப்படுத்தியதாக நரிக்குறவா் இன மக்கள் புகாா் இரவு வரை நீடித்த வாக்குப்பதிவு

வாக்கு எண்ணும் மையத்துக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

SCROLL FOR NEXT