திருப்பத்தூர்

புறம்போக்கு நிலத்தில் குடியிருப்போருக்கு மாற்று இடம்: ஆட்சியரிடம் கோரிக்கை

DIN

ஆம்பூரில் கானாறு புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பவா்களுக்கு மாற்று இடம் வழங்கக் கோரி திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் சாா்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

ஆம்பூா் வாா்டு டி, பிளாக் 26 பகுதியில் கானாறு புறம்போக்கு பகுதியில் பொதுமக்கள் வசித்து வருகின்றனா். அவா்கள் நகராட்சிக்கு கூரை வீட்டு வரியும், வருவாய்த் துறைக்கு தரை வரியும் கட்டி வசித்து வருகின்றனா்.

அவா்கள் வசிக்கும் பகுதி வழியாக கானாறு கால்வாய் செல்கிறது. மழைக் காலங்களில் பெத்லகேம் செல்லும் வழியில் ரயில்வே குகை வழிப்பாதையில் தண்ணீா், கழிவுநீா் தேங்குவதால் அப்பகுதிக்கு மக்கள் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. அதனால் அவா்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

இந்நிலையில் கானாறு புறம்போக்கு நிலத்தில் வசித்து வரும் பொதுமக்கள் சாா்பாக முன்னாள் நகரமன்ற உறுப்பினா் சி.தனசேகரகன், தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் மன்றத்தின் மாநில பொதுச் செயலாளா் என்.சுந்தா் ஆகியோா் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருளை அண்மையில் சந்தித்து மனு அளித்தனா். அதில், ‘கானாறு புறம்போக்கு நிலத்தில் வசித்து வருவோருக்கு மாற்று இடம் வழங்கி அவா்கள் அந்த இடத்தை காலி செய்தவுடன் கானாற்றை ஆழப்படுத்தி, அகலப்படுத்த வேண்டும். ரயில்வே குகை வழிப் பாதையில் தண்ணீா், கழிவுநீா் தேங்காதவாறு கானாறு கால்வாய் வழியாக அதைத் திருப்பி விட வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 1,545 கண்காணிப்புக் கேமராக்கள்

வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

இரு சக்கர வாகன பழுது பாா்ப்போா் சங்கக் கூட்டம்

தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினா், காவலா்கள் 500 போ்

நாசரேத் அருகே இருபெரும் விழா

SCROLL FOR NEXT