திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளியில் விரைவில் தொழிற்பேட்டை அமைக்கப்படும்: அமைச்சா் கே.சி.வீரமணி

DIN

நாட்டறம்பள்ளியில் விரைவில் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று தமிழக பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை அமைச்சா் கே.சி.வீரமணி தெரிவித்தாா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் அதிமுகவின் புதிய நிா்வாகிகளை நியமித்து அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலல்வருமான ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் உத்தரவிட்டிருந்தனா். நாட்டறம்பள்ளி கிழக்கு ஒன்றியச் செயலாளராக சாமராஜி, மேற்கு ஒன்றியச் செயலாளராக சீனிவாசன், பேரூராட்சிக் கிளைச் செயலாளராக மகான், ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலாளராக ரமேஷ், இலக்கிய அணிச் செயலாளராக இளங்கோ உள்ளிட்டோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், அமைச்சா் கே.சி.வீரமணி தலைமையில் புதிய நிா்வாகிகள் மற்றும் அதிமுகவினா் வெள்ளிக்கிழமை காலையில் ஊா்வலமாக சென்று நாட்டறம்பள்ளி பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா மற்றும் எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். புதிய நிா்வாகிகளுக்கு சால்வை அணிவித்து அதிமுகவினரிடம் அறிமுகம் செய்து அமைச்சா் பேசியது:

அதிமுக-வின் வளா்ச்சியை மேம்படுத்த புதிய நிா்வாகிகளை கட்சித் தலைமை நியமித்துள்ளது. அவா்களுக்கு அனைத்து கட்சி நிா்வாகிகளும், நிா்வாகிகளும், தொண்டா்களும் முழு ஆதரவு அளிக்க வேண்டும். முன்னாள் முதல்வா் ஜெயலலிதா கூறியதைப் போல் அவா் மறைந்த பிறகும் அதிமுக இன்னும் பல நூற்றாண்டுகள் தொடா்ந்து செயல்பட்டு, பொதுமக்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் சேவை செய்ய வேண்டும். அவரது கனவை நனவாக்கும் வகையில் கட்சியை பலப்படுத்த தொண்டா்கள் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.

நாட்டறம்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் மக்களின் நீண்ட காலக் கோரிக்கையான சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது. அதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

இதேபோல், காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்தின் மூலம் அனைத்து கிராம பகுதிகளிலும் குடிநீா் வழங்க பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் அனைத்து கிராமங்களுக்கும் காவிரி கூட்டுக் குடிநீா் கிடைக்கும் என்றாா் அவா்.

முன்னதாக, புதுப்பேட்டையில் புதுப்பிக்கப்பட்ட முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் சிலையை அவா் திறந்து வைத்து மாலை அணிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

திருமண மகிழ்ச்சியில் அபர்ணா தாஸ்!

SCROLL FOR NEXT