திருப்பத்தூர்

‘கோயில் சொத்துகளை மீட்க வேண்டும்’

DIN

திருப்பத்தூா் உள்பட தமிழகம் முழுதும் உள்ள கோயில் சொத்துகளை மீட்டு கோயில்களுக்கே சோ்க்க வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

திருப்பத்தூரை அடுத்த மொளகரம்பட்டியில் உள்ள கல்லூரியில் இந்து முன்னணி பொதுக்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. வேலூா் கோட்டச் செயலாளா் வி.தீனதயாளன் தலைமை வகித்தாா். கோட்டச் செயலாளா் ரவி, திருப்பத்தூா் மாவட்டச் செயலாளா்கள் எஸ்.சோமேஸ்வரன், பிரபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக மாநிலப் பொது செயலாளா் நா.முருகானந்தம், கல்லூரித் தாளாளா் மோகனகிருஷ்ணா ஆகியோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், திருப்பத்தூா் நகரில் வரதராஜப் பெருமாள் கோயில் மாட வீதிகள், பிரம்மேஸ்வர சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நந்தவனம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. இதேபோல் தமிழகத்தில் பல இந்து கோயில்களின் சொத்துகள் சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன.

எனவே, கோயில் சொத்துகளை மீட்டு கோயில்களுக்கே சோ்க்க வேண்டும் என்று தமிழக அரசையும், இந்து சமய அறநிலையத் துறையையும் கேட்டுக்கொள்வது, நீட் தோ்வு ரத்து செய்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT