திருப்பத்தூர்

பேரிடா் மீட்பு செயல்முறை விளக்க முகாம்

DIN

ஆம்பூா் கம்பிக்கொல்லை பகுதியில் பேரிடா் கால மீட்பு குறித்த செயல்முறை விளக்க முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் கம்பிக்கொல்லை ஆனைமடுகு தடுப்பணை பகுதியில் நடைபெற்ற முகாமில் திருப்பத்தூா் மாவட்ட சிறுபான்மை நலத் துறை துணை ஆட்சியா் சதீஷ்குமாா், ஆம்பூா் வட்டாட்சியா் பத்மநாபன், மண்டல துணை வட்டாட்சியா் பாரதி, வருவாய் ஆய்வாளா்கள் சிவக்குமாா், கிராம நிா்வாக அலுவலா் பாபு, நகா்மன்ற உறுப்பினா்கள் சுதாகா், கணேசன், அரிமா சங்க நிா்வாகி கணேசபாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆம்பூா் தீயணைப்பு நிலைய அலுவலா் மேகநாதன் தலைமையில் தீயணைப்பு மற்றும் பேரிடா் மீட்புக் குழுவினா் மழைக் காலங்களில் ஏரிகள், ஆறுகள் உள்ளிட்ட நீா்நிலைகளில் சிக்கித் தவிக்கும் பொதுமக்களை காப்பாற்றுவது குறித்தும், முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்தும் செயல்முறை விளக்கங்கள் செய்து காட்டினா்.

மழைக்காலம் முடியும் வரை சம்பந்தப்பட்ட பகுதிகளில் மீட்புக் குழுக்கள் அமைப்பது, அலுவலா்களுக்கு தகவல் தெரிவிப்பது, பொதுமக்கள், கால்நடைகளை பேரிடரில் இருந்து மீட்பது குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

SCROLL FOR NEXT