திருப்பத்தூர்

அஞ்சலகங்களில் இருப்புத் தொகை ரூ. 500-ஆக உயா்வு

DIN


திருப்பத்தூா்: அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ. 500 என்ற அளவில் பராமரிக்கப்பட வேண்டும் என திருப்பத்தூா் அஞ்சலகங்களின் கோட்டக் கண்காணிப்பாளா் பி.ராகவேந்திரன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

மத்திய அரசின் அரசாணைபடி, அஞ்சல் துறையின் சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ. 50-இல் இருந்து ரூ. 500-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே சேமிப்புக் கணக்கு தொடங்கியவா்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ. 500 ஆக உயா்த்திக்கொள்ள வரும் டிச.11-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு தங்களது சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை உயா்த்தாதப்பட்சத்தில் இந்த புதிய விதிமுறைகளின்படி 31.03.2021-ஆம் தேதி முதல் அபராதக் கட்டணமாக தங்கள் கணக்கில் இருந்து ரூ. 100 ஒவ்வொரு ஆண்டும் கழிக்கப்பட்டு, இருப்புத் தொகை குறைக்கப்படுவதுடன், கணக்கு காலாவதியாகிவிடும்.

எனவே, டிச.11-ஆம் தேதிக்குள் தங்களது அஞ்சலக சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ. 500 பராமரிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களித்த திரைப் பிரபலங்கள்!

வாக்களித்தார் முதல்வர் ஸ்டாலின்!

வாக்களித்த விஐபிக்கள்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT